லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச்சென்ற கப்பல் விபத்து :30 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று லிபியாவுக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது.
சுமார் 100 அகதிகளுடன் பயணித்த அந்தப் கப்பலிலிருந்து சுமார் 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக வியாழக்கிழமை மத்தியதரைக் கடலில் படகுப் பயணத்தை மேற்கொண்ட சுமார் 562 அகதிகளை காப்பாற்றியுள்ளதாக இத்தாலிய கடற்படையினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடலில் கவிழ்ந்த ரோலர் படகொன்றிலிருந்து இத்தாலிய கடற்படையினரால் குடியேற்றவாசிகள் மீட்கப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ரோலர் படகில் பயணித்தவர்கள் மீட்புக் கப்பலொன்றைக் கண்டதும் ஒரு பக்கமாக சென்றமை காரணமாக சமநிலை இழந்த அந்தப் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த புதன்கிழமை இதே ரோந்துப் படகால் மேலும் 108 அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர்.
Related posts:
|
|