ரோஹிஞ்சா இன மக்கள் படுகொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்!
Monday, December 5th, 2016மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், மியன்மரில் முஸ்லிம் சிறுபான்மையின மக்களான ரோஹிஞ்சா இன மக்கள், இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில், ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில், ரோஹிஞ்சா இன மக்களுக்கு ஆதரவாக பேசிய அவர் பர்மிய தலைவர் ஆங்சாங் சூ சி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு இதுவரை நடைபெற்றதேல்லாம் போதும் என வலிமையான செய்தி ஒன்றை அனுப்ப விரும்புவதாக தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்திலிருந்து கடுமையான மோதல்கள் நடைபெற்றுவருவதால் பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா இன மக்கள், ரக்கின் மாநிலத்தில் உள்ள தங்களின் வீடுகளிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்; முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியா, தங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக மியான்மார் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
மியான்மாரின் புத்த மத பெரும்பான்மை மக்களால், வங்கேசத்திலிருந்து சட்ட விரோதமாக வந்த மக்களாகவே ரோஹிஞ்சா இன மக்கள் பார்க்கப்படுகின்றனர்.
Related posts:
|
|