ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தெடர்பை நிராகரிக்கும் மியன்மார் !

Tuesday, August 8th, 2017

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளில் இன அழிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மியன்மார் முற்றாக நிராகரித்துள்ளது.

மேலும், மியன்மார் மீதான குற்றச்சாட்டுகள் ஐ.நா. அறிக்கையில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது என ராக்கின் மாநில புலன் விசாரணைப் பிரிவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ராக்கின் வன்முறை தொடர்பில் கடந்த எட்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதி அறிக்கையை வெளியிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் இன அழிப்பு குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கின் மாநிலத்தில், ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் எல்லை படையினர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது கிராமவாசிகள், படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் சுட்டு வீழத்தப்பட்டதாகவும், பெண்கள் படையினாரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: