ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடூரம்!

Monday, September 4th, 2017

மியன்மார் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 370 பேர் சுட்டுக் கொன்றுள்ளதாக மியன்மார் இராணுவம் செய்திவெளியிட்டுள்ளது.

மியன்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில் உள்ள மியன்மார் நாட்டின் எல்லை பிராந்தியத்தில் கடந்த 25 ஆம் திகதி அந்த நாட்டின் சிறுபான்மை இனமான ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கும் மியன்மார் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன

இந்த மோதலின்போது, நூற்றுக் கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 40 ஆயிரம் பேர் வரையில் பங்களாதேஷூக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் உடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிiலையில், அவற்றில் 370 பேர் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மியன்மாரின் இராணுவ தளபதியான மின் ஆங் கிளயிங் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் 15 இராணுவ வீரர்களும் 14 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அதேவேளை, 9 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எவ்வாறெனினும், மியன்மார் இராணுவத்தின் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்த மனித உரிமை அமைப்புக்களின் தரவுகளுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு நடக்கும் கொடூரங்கள் குறித்த காணொளி ஒன்றை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது

Related posts: