ரூ.5000 நோட்டுகளுக்கு தடை இல்லை – பாகிஸ்தான்!

Wednesday, December 28th, 2016

 

பாகிஸ்தானில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை அந்நாட்டு நிதித்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதுபோன்று பாகிஸ்தானில் மிக உயர்ந்த மதிப்புள்ள 5000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.

எனவே, இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை அந்நாட்டு நிதித்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

பாகிஸ்தானில் 5000 ரூபாய் நோட்டுகள் இந்த ஆண்டு 17 சதவீதம் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. எனவே அந்த ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டால் பண பரிமாற்றம் மற்றும் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும்.

எனவே ரூ.5000 நோட்டுகளை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளது.

1-15

Related posts: