ரியோ ஒலிம்பிக்கில் தாக்குதல் நடத்த திட்டம்: 10 பேர் கைது!

Friday, July 22nd, 2016

பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் தொடரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 பேர் அடங்கிய கும்பலை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒலிம்பிக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பிரேசின் ரியோ நகரிரல் தொடங்கவுள்ளது நினைவுக்கூரதக்கது. 10 பேர் கைது குறித்து பிரேசில் நாட்டின் நிதித்துறை மந்திரி அலேக்சாண்ட்ரே டி மொரேஸ் கூறுகையில், தாக்குதல் நடத்த தற்காப்புக் கலை, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சி தொடங்க வேண்டும் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இது நடந்து கொண்டே இருந்தது. அவர்களில் ஒருவன் பராகுவேயில் உள்ள ஆயுத விற்பனை கும்பல் உடன் தொடர்பு கொண்டு ஏ.கே. 47 துப்பாக்கி வாங்க கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த கும்பல் இணையதளம் மூலம் தொடர்புகொண்டு வந்ததை கண்காணித்தபோது அவர்களது திட்டம் குறித்து தெரியவந்தது.

இதனால் 130 அதிகாரிகள் இந்த கும்பலை தேடும் வேட்டையில் ஈடுபட்டது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் 19 பேரை தேடிவருகிறோம் என தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தீவிரவாத செயலுக்காக காத்திருந்த கும்பல் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: