ராம்குமார் கடைசியாக பேசியது என்ன?

Wednesday, September 21st, 2016

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் கடந்த ஞாயிறு அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் கடைசியாக அவர் பேசியது என்ன என்பது குறித்து சக கைதி ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசாரணை கைதி ஒருவர் ராம்குமாரிடம் ‘கவலைப்படாதே தம்பி, எனக்கும் உங்க ஏரியா தான். முதல் தடவை வரும் போது இதுமாதிரியாகத் தான் இருக்கும். நீ கொலை செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும், இந்த வழக்கின் தீர்ப்பு உனக்கு சாதகமாகத்தான் வரும்’ என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

அப்போது, ‘எனக்கும், இந்த கேஸிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுவாதி யார் என்றே தெரியாது. வெளியில் சென்ற பிறகு இந்த வழக்கில் என்னை எப்படி சிக்க வைத்தார்கள் என்பதை மீடியாக்களிடம் சொல்வேன்’ என்று நம்பிக்கையுடன் ராம்குமார், அந்த கைதியிடம் சொல்லி இருக்கிறார். இதற்குள் அங்கு வந்த சிறைக்காவலர் ஒருவர், இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். ராம்குமார் மரணத்திற்கு முன்னர் கடைசியாக பேசியது இதுதான்

 Ramkumar- Puzhal prison long

Related posts: