ரஷ்ய போர் கப்பலுக்கு ஸ்பெயின் தடங்கல்!

Friday, October 28th, 2016

சிரியா நோக்கி செல்லும் ரஷ்யாவின் மூன்று போர் கப்பல்களுக்கு ஸ்பெயின் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் கோரிக்கையை அந்த நாடு வாபஸ் பெற்றுள்ளதாக வெளியான செய்தியை ஸ்பெயினுக்கான ரஷ்ய தூதரகம் உறுதி செய்துள்ளது

இந்த போர் கப்பல்களால் சிரிய நாட்டு பொதுமக்கள் இலக்காகலாம் என்று நேட்டோ கூட்டணி குற்றம்சாட்டியதை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளது. சியுடா துறைமுகத்தில் இடைத்தங்கிய இந்த கப்பலுக்கான வசதி இரத்துச் செய்யப்பட்டதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

சிரியா நோக்கிச் செல்லும் இந்த போர் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதிக்கக் கூடாது என்று ஸ்பெயினுக்கு நேட்டோ அழுத்தம் கொடுத்து வந்தது. சியுடாவில் எரிபொருள் நிரப்புவதற்கு பிரதான கப்பல், விமானதாங்கி கப்பலில் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் விடப்படவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு பின்னர் அறிவித்திருந்தது.

எனினும் சியுடாவில் எரிபொருள் நிரப்பும் கோரிக்கையை வாபஸ் பெற்றதாக ஸ்பெயினுக்கான ரஷ்ய தூதரகம் உறுதி செய்துள்ளது. வடக்கு ரஷ்யாவில் இருந்து எட்டு போர் கப்பல்கள் கிழக்கு மத்தியதரைக் கடலை நோக்கிச் செல்வதை நேட்டோ அவதானித்துள்ளது. இவை சிரிய யுத்தத்தில் பயன்படுத்தப்படும் என்று நேட்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளது.

coltkn-10-28-fr-07173222506_4920645_27102016_mss_cmy

Related posts: