ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபர்  புதின் பேச்சு!

Saturday, March 3rd, 2018

ரஷ்யாவில் எதிர்வரும் 18 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியுள்ள தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின், வறுமையை குறைப்போம் என உறுதி அளித்துள்ளார்.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவல் குருதினினும், எல்.டி.பி.ஆர். கட்சி சார்பில் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கியும் களம் இறங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த தேர்தலில் புதின்தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆதரவை தொடர்ந்து தக்கவைத்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீத ஓட்டுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெறாவிட்டால், இரண்டாவது சுற்று தேர்தல் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் (அதிபர் மாளிகை) புனித ஜார்ஜ் அரங்கில் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில், தற்போதைய பதவி காலத்தில் கடைசி முறையாக விளாடிமிர் புதின் உரையாற்றியுள்ளார்.


ஐரோப்பிய சந்தைகளில் பிரித்தானிய நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு பெறப்படும் - தெரீசா மே!  
பிரான்ஸின் புதிய ஜனாதிபதி - ரஷ்ய ஜனாபதிக்கும் இடையே பேச்சு!
திருநங்கைகள் பணியாற்ற முடியாது - ட்ரம்ப் !
பதவி விலக மறுக்கும் முகாபே - சிம்பாவேயில் பதற்றம்!
துருக்கியில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!