ரஷ்ய தூதுவர் படுகொலைக்கு இலங்கை கண்டனம்!
Tuesday, December 20th, 2016துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்திற்கு இலங்கை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
துருக்கியின் அங்கார நகரில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம்இடம்பெற்றுள்ளதாகவும், Mevlut Mert Aydintas என்ற 22 வயதுடைய நபரே துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என இனங்காணப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்துஉயிரிழந்துள்ளார்.
ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்னேகடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்கணக்கிலேயே இந்த தகவலை பதிவேற்றம் செய்துள்ளார்.
Related posts:
செஷெல்ஸில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!
செல்வந்த நாடுகள் அகதிகளுக்கு போதிய அளவு உதவவில்லை: அம்னெஸ்டி!
ஈரானின் கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி மறுப்பு!
|
|