ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டு படுகொலை!

Tuesday, December 20th, 2016

துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில்,வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என  ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கலைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்ற தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன. இந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர், பணியில் இல்லாத துருக்கி போலீஸ்காரர் என்று கூறப்படுகிறது. மிக நெருக்கமான தூரத்தில் இருந்து ரஷ்ய தூதர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் ரஷ்ய தூதர் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

“தீவிரவாதம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இன்னும் உறுதியுடன் எதிர்ப்போம்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் என்றும், அவர் எப்போதும் மனதில் நிலைத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்ஸன், பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹொலாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.

`_93036227_russ

Related posts: