ரஷ்ய தீப்பரவல்:  பலி எண்ணிக்கை அதிகரிப்பு, 16 பேர் மாயம்!

Tuesday, March 27th, 2018

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரத்தில் உள்ள அங்காடி நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதுடன் 16 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்காடி ஒன்றின் மேல் மாடியின் சினிமா கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 41 பேர் சிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து 3 ஆயிரத்து 600 கிலோமீற்றர் தூரத்தில் ஏற்பட்ட இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

Related posts: