ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் தகர்ப்பு !

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் நேற்று 11 வது நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின.
அந்த வகையில் உக்ரேனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் –
அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் தாக்கினர். விமான நிலையத்தை முழுவதுமாக தகர்த்துவிட்டனர். நமது உள்கட்டமைப்பு, நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை, மற்றும் நமது பெற்றோர், தாத்தா பாட்டி என உக்ரேனியர்களின் பல தலைமுறைகளை அவர்கள் தொடர்ந்து அழித்து வருகின்றனர் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|