ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!

Tuesday, January 30th, 2018

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், அலெக்சி நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஷ்யாபின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.இந்த நிலையில் குறித்த தேர்தல் நியாயமாக நடைபெறாது எனவும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.

இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலையில், மொஸ்கோ நகரில் உள்ள கிரெம்ளின் மாளிகை அருகில் நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்து அலெக்சி நவல்னியை ரஷ்ய பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

Related posts: