ரஷ்யா இல்லாதது பாதிக்கும் – ரஷ்ய ஜனாதிபதி புடின்!
Friday, July 29th, 2016
ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுகளில் பங்கேற்க இயலாத நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்துமென ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார்.
ஊக்கமருந்து விவகாரத்தால் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீர வீராங்கனைகள் பிரேஸில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தடகள வீர வீராங்கனைகள் தான் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளானார்கள். தடி ஊன்றிப் பாய்தல் சாதனை மங்கை இசின்பேயவேவா செர்ஜி கபென்கோவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் அடங்குவார்கள்.
தடகளத்தில் ஒரே ஒரு ரஷ்யர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் அனுமதியளித்துள்ளது. நீளம் பாய்தல் வீராங்கனை டாரியா கிறிஸ்னா மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் முன்னணி விளையாட்டு வீரர்கள்இ வீராங்கனைகள் இல்லாதது பிரேஸில் ஒலிம்பிக் போட்டிக்கு மிகப் பெரிய பாதிப்பு என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ரஷ்யர்கள் பங்கேற்க இயலாத நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
ரஷ்ய வீர வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டது முற்றிலும் பாரபட்சமானது. இவ்வாறு விளாடிமிர் புடின் கூறியுள்ளார். பிரேஸில் ஒலிம்பிக் போட்டியில் 23 வகையான விளையாட்டில் 286 ரஷ்ய வீர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
Related posts:
|
|