ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அலெப்போ நகரில் தாக்குதல்களை நிறுத்த ரஷ்யா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா தொடர்பாக ரஷ்யாவுடன் உள்ள தொடர்புகளையும் அமெரிக்கா இடைநிறுத்தும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான் கெர்ரி, சிரியாவில் தீப்பிடிக்கக்கூடிய மற்றும் பதுங்கு குழி குண்டுகள் பயன்பாட்டுக்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று, கிளிர்ச்சியாளர் பிடியில் உள்ள கிழக்கு அலெப்போபில் நடந்த தாக்குதல்களில் 96 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.சிரியாவில் நடக்கும் சம்பவங்கள், கசாப்புக் கடையைவிட மோசமாக இருப்பதாக ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் விமர்சித்துள்ளார்.
Related posts:
எகிப்து விமான விபத்து - சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு !
பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் – லெபனானுக்கான ...
|
|