ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்!

Friday, July 6th, 2018

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் பகுதிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீபகற்பத்தின் தெற்கு முனையான ஓசர்நோவ்ஸ்கியில் இருந்து 58 மைல் தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ரஷ்யாவில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து வெகு தொலைவில் இந்த தீபகற்பம் அமைந்துள்ளதால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: