ரஷ்யாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று!

Wednesday, May 6th, 2020

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாவது நாளாகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 155,370 ஆக அதிகரித்துள்ளதுடன், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் புதிதாக 10,102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,671,383 . மேலும் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 253,216 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: