ரஷ்யாவின் புதிய ஒரியன் ஆளில்லா போர் விமானம் – போரின் தன்மைகளையே அடியோடு மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகவும் தகவல்!

Sunday, January 23rd, 2022

ரஷ்யாவின் க்ரோன்ஷ்டாட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய MALE ரக சுய நுண்ணறிவு ஆற்றல் கொண்ட ஒராயன் ரக ஆளில்லா சண்டை விமானங்கள் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக பாரக்கப்படுகிறது.

இந்த ஆளில்லா விமானம் 7.5 கிலோமீட்டர் உயரத்தில் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கக்கூடியது இதனை தரையில் இருந்து ஒரு விமானி இயக்குவார்.

சுமார் 250 கிலோ அளவிலான ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இது 4 வானிலக்கு ஏவுகணைகள் அல்லது KAB-20, KAB-50, UPAB-50 ஆகிய குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டவை ஆகும்.

கடந்த மாதம் நடைபெற்ற சோதனையின் போது இந்த ஒராயன் ஆளில்லா சண்டை விமானம் மற்றோரு ட்ரோனை வானிலக்கு ஏவுகணையை ஏவி அழித்தது, ஆகவே இதனை கொண்டு மற்ற ட்ரோன்கள் மற்றும் தரை இலக்குகளை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: