ரஷிய முறையீட்டை தள்ளுபடி செய்தது விளையாட்டு தீர்ப்பாயம்!

Friday, July 22nd, 2016

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதன் விளைவாக ரஷிய தடகள வீரர்கள் விளையாட்டு மைதானங்களில் பங்கேற்க உள்ள தடையை எதிர்த்து ரஷியா செய்த முறையீட்டை சுவிட்ஸர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்திய தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.

சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பின் விதிமுறைகளின்படி, ரஷிய வீரர்கள் அடுத்த மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி இல்லை என கூறியுள்ளது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு சட்டப்படியாக கட்டுப்படுத்தாது என்று ரஷிய விளையாட்டுத் துறை அமைச்சர் விட்டலி முட்கோ தெரிவித்துள்ளார்.மேலும், சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பை முற்றிலும் ஊழல் மிகுந்தது என்றும் அழைத்துள்ளார்.

ரஷிய வீரர்கள் மீதான கூட்டு தண்டனைக்கு தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ள விட்டலி முட்கோ, தற்போது நிலையை ரஷிய சுவிஸ் மத்திய நீதிமன்றத்தில் இன்னும் முறையீடு செய்யலாம்.

இந்த நிலையில், மற்ற போட்டிகளில் ஊக்க மருந்து தொடர்பான குற்றச்சாட்டு காரணமாக, ஒட்டு மொத்த ரஷிய வீரர்களை ரியோ போட்டிகளிலிருந்து தடை செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிசீலித்து வருகிறது.

Related posts: