யேமன் விமானத் தாக்குதலில் 5 பேர் பலி 14 பேர் படுகாயம்!

Thursday, March 1st, 2018

சவூதி தலைமையிலான கூட்டணி யேமனின் வடக்கு பகுதியில் உள்ள நகராக சாதாவில் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி 5 பேர் பலியாகியதுடன் குழந்தைகள் உட்பட 14 பேர்காயமடைந்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக ஹெளதிப் போராளிக் குழுவினருக்கு எதிரான மோதலை யேமனுடன் சேர்ந்து சவூதி தலைமையிலான கூட்டணி முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் மோதல் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: