யேமன் இராணுவ தலையமையக தாக்குதலை ஐ.எஸ் பொறுப்பேற்பு !

யேமன் இராணுவ தலையமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 14 பேர் பலியானதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
யேமனில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க சர்வதேச ஆதரவு பெற்ற அரச படைகள் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன.
இந்த தாக்குதல்களில் ஏராளமான தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் தாக்குதலாக நேற்றைய தாக்குதல் அமைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: 35 பயணிகள் உடல் கருகி பலி!
ரஷ்ய தூதுவருடன் ட்ரம்பின் மருமகன் இரகசிய தொடர்பு!
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம்!
|
|