யூதர்களைக் காப்பாற்றிய ஸ்வீடன் பெண்மணி புனிதராக அறிவிக்கப்பட்டார்!

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் யூத குடும்பங்களை காப்பாற்றிய பெண்மனி ஒருவர் ஸ்வீடன் நாட்டின் முதல் முறையாக புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அறுநூறு வருடங்களில் ஸ்வீடன் நாட்டின் முதல் துறவியும் இவராவார். எலிசபத் ஹிசல்ப்ளாட், என்னும் அவர் ரோமன் கத்தோலிக்க கான்வெண்டின் தலைவியாக இருந்தார், அங்குதான் டஜன் கணக்கான யூதர்களை மறைத்து வைத்து அவர்களை காப்பாற்றினார் அவர்.
அதேபோல் 17 ஆம் நூற்றாண்டில் ஏழைகள் மருத்துவ வசதி மற்றும் இருப்பிடங்களை பெறுவதற்கு உதவிய ஸ்டானிஸ்லாஸ் பப்சின்ஸ்கி என்ற போலாந்து நாட்டை சேர்ந்தவருக்கும் துறவி பட்டம் வழங்கியுள்ளார் போப் பிரான்ஸிஸ்.
இவர் கன்னி மாதவின் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆண்களுக்கான முதல் மதப் பிரிவை நிறுவியவராவார்.
Related posts:
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இலங்கையுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும்!
உடன் அமுலுக்கு வரும் வகையில் வடகொரிய ஜனாதிபதி விதித்த தடை!
ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புட்டினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு - ரஸ்ய அதிகார...
|
|