யுத்த நிறுத்தத்தில் காஸாவில் தாக்குதல்!

Wednesday, June 16th, 2021

காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுத்த நிறுத்தத்தின் பின்னர் அரங்கேறிய முதல் தாக்குதலாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹமாஸ் படையினர், தெற்கு இஸ்ரேலுக்கு தீ பரவலை ஏற்படுத்தும் பலூன்களை அனுப்பியமைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நேற்று காஸாவிலிருந்து பல பலூன்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதால் பல தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஆகவே ஹமாஸின் இராணுவப் பிரிவுக்கு சொந்தமான தளங்கள், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் இஸ்ரேலின் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை, அதன் போர் விமானங்கள் கான் யூனிஸ் மற்றும் காசா நகரத்தில் ஹமாஸ் செயற்பாட்டாளர்களின் இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிவக்கப்பட்டுள்ளது.

000

Related posts: