மோல்டோவா அரசை கவிழ்க்க ரஷ்யா சதி – மோல்டோவா ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Wednesday, February 15th, 2023

மோல்டோவா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சிக்கு ரஷ்யா சதி செய்கிறது என மோல்டோவா ஜனாதிபதி மாய்யா சாந்து கூறியுள்ளார்.

ஐரோப்பாவுக்கு ஆதரவான நாட்டின் தலைமையை அகற்றுவதற்காக, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில், நாசவேலை செய்பவர்களுடன் ரஷ்யா சதி செய்கிறது என அவர் நேற்று கூறியுள்ளார்.

யுக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு மோல்டோவா. 26 லட்சம் பேர் அந்நாட்டில் வசிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு கடந்த வருடம் மோல்டோவா விண்ணப்பித்திருந்தது.

மோல்டோவாவில் அழிவு வேலைகளுக்கு ரஷ்ய புலனாய்வாளர்கள் திட்டமிடுவதாக யுக்ரைனுக்கு தகவல் கிடைத்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலெஸன்ஸ்கி, கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்யா, பெலாரஸ், சேர்பியா. மொன்டேனீக்ரோ முதலான நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரஜைகளைப் பயன்படுத்தி தனது திட்டத்தை அமுல்படுத்த ரஷ்யா திட்மிட்டமிடுகிறது என மோல்டோவா ஜனாதிபதி மாய்யா சாந்து கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பேரவை பேச்சாளர் ஜோன் கேர்பியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்த செய்தி அறிக்கைகள் கரிசனைக்குரியவை எனத் தெரிவித்துள்ளார்.

சதிப்புரட்சி குறித்த தகவல்களை அமெரிக்காவினால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், ஆனால், விளாடிமிர் புட்டினுக்கு இதை செய்யும் ஆற்றல் உள்ளது எனவும் அவர் கூறினார்.

000

Related posts: