மொஸ்கோவின் புறநகர் பகுதி அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 115 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 5 சிறுவர்கள் உட்பட 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் உக்ரைனுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இந்த தாக்குதலுடன் உக்ரைனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்டகது
000
Related posts:
மத்திய கிழக்கு பொருளாதாரங்கள் பாதிப்பு - ஐ.நா ஆய்வு!
பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு!
நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் கொரோனா தொற்று – தீர்மானிக்க முடியாதுள்ளது என்கிறார் சுகாதார அமைச்ச...
|
|
ஐ.நா. ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டு - இலங்கையை வலுவாக ஆதரிப்போம...
இளைஞர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவது நிலைமையின் பாரதூரதன்மையை காண்பிக்கின்றது - சுகாதார சேவைகள் பண...
திறக்கப்பட்டது எகிப்தின் ரஃபா எல்லை - பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் சென்றடைந்தது நிவாரணப் ...