மொரோக்கோவின் மத்திய பகுதியில் நில அதிர்வு – பலியானோரின் எண்ணிக்கை 632 அதிகரிப்பு!

Saturday, September 9th, 2023

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 632 ஆக அதிகரித்துள்ளது.

அத்துதுடன் 6.8 மெக்னிடியூட் அளவில் குறித்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நில அதிர்வு மர்ராகேஷ் பகுதியிலிருந்து 71 கிலோமீற்றர் தொலையில் உள்ள ஹை அட்லஸ் மலைத்தொரில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலஅதிர்வினால் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  அங்கு சுமார் 10 நிமிடங்கள் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோவின் உள்ள ஆறு மாகாணங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  மொரோக்கோவின் பழைய வரலாற்று கட்டிடங்களும் இதன்போது இடிந்து வீழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இடிபாடுகளுக்குள் சிக்குள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: