மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பாரதப் பிரதமர் அறிவிப்பு!
Tuesday, April 14th, 2020இந்தியா முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து பாரதப் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போது, ஊரடங்கு உத்தரவை நீடித்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதேவேளை இதுவரை இந்தியாவில் 10,363 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 339 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வட கொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது தென்கொரியா!
யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை - பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம்முதல் வழங்க நட...
அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
|
|