மேலும் வடகொரியா மீது பொருளாதார தடை – டொனால்ட் டிரம்ப்!

Friday, September 22nd, 2017

வட கொரியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வட கொரியா 6-வது முறையாக அணு ஆயுத பரிசோதனை செய்தது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

வட கொரியாவின் அத்துமீறல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியான Ashraf Ghani சந்திப்பதற்காக டொனால்ட் டிரம்ப் புறப்படுவதற்கு முன்னதாக சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘வட கொரியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பினாது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் விரிவாக வெளியிடப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா எந்தளவிற்கு கடுமையான பொருளாதார தடையை விதிக்கிறதோ அந்தளவிற்கு அணு ஆயுத பரிசோதனையை விரைந்து செய்வோம் என வட கொரியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: