மேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு!
Friday, March 15th, 2019மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 7.30 மணிக்கு ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இறந்தவர்களில் அபூர்வா பிரபு, ரஞ்சனா டாம்பே மற்றும் சிராஜ் கான் ஆகியோரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் இடிபாடுகள் முழுவதும் அகற்றப்படாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் செயிண்ட் ஜார்ஜ், ஜிடி மற்றும் சியான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் அதிகம் பேர் வந்து செல்லும் இந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், உள்வருவதுமாக பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே நடைமேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளது.
Related posts:
|
|