மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி !

Tuesday, May 4th, 2021

மெக்ஸிகோவின் தலைநகரில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்தில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாயன்று மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர அரசாங்கத்தின் செயலாளர் அல்போன்சோ சுரேஸ் டெல் ரியல் மிலெனியோ தொலைக்காட்சிக்கு வழங்கிய உரையில் தெரிவித்துள்ளார்.

Related posts: