மெக்சிக்கோவில் 132 அரசியல்வாதிகள் கொலை!

மெக்சிக்கோ ஜனாதிபதித் தேர்தல் இன்று (2) நடைபெறவுள்ள நிலையில் அதிக அளவிலான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட 9 மாத காலப்பகுதியினுள், 132 அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்சிக்கோவில் உள்ள 31 மாநிலங்களில் 22 மாநிலங்களில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தவிர, கடத்தல், கப்பம் கோரல் உட்பட்ட 543 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கனடா மாநகரசபைத் தேர்தல்: இலங்கைத் தமிழர் வெற்றி!
அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
ரஷ்யாவில் அடுக்குமாடி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|