மெக்சிக்கோவில் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி!

Tuesday, April 30th, 2019

மெக்சிக்கோ நாட்டின் வட பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 40 பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து, சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 20 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related posts: