மெகுனு புயல் தாக்கம் : ஓமானில் 11 பேர் பலி!

ஓமன் மற்றும் எமனில் மெகுனு என்ற புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் எமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. எமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளிகாற்று வீசி கடும்மழை பெய்துள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஜெயலலிதா கச்சதீவை மீட்பார்- ஸ்டாலின் நம்பிக்கை!
அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒல்லாந்து சந்தேகம்!
மத்திய தரைக்கடல் கோர விபத்து - பெண்கள் குழந்தைகள் உட்பட 94 பேர் பரிதாபமாக பலியாகினர்!
|
|