மெகுனு புயல்: எமனில் 5 பேர் உயிரிழப்பு!

எமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேரை காணவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எமனில் சொகோட்ரா தீவு தெற்கு எமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொகோட்ரா தீவில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
புயல் தாக்குதலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 40 பேரை காணவில்லை எனவும், அவர்கள் எமன், இந்தியா மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கியுள்ள சொகோட்ரா தீவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!
அணுஆயுத உற்பத்தி ஆலைகளை மூடுவதற்கு உறுதி!
மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை - பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிப்பு!
|
|