மெகி புயலுக்கு சீனாவில் 16 பேர் பலி!

Wednesday, October 5th, 2016

சீனாவில் மெகி புயலின் தாக்கத்தால் ஏற்பட் கடும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குள்ள ஜெஜியாங் மாகாணத்தில் காணாமற்போயுள்ள 17 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சுசுன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் காணாமற்போயினர். இதில் 16 பேரின் உடல்களை மாத்திரம் மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மெகி புயலால் தென்கிழக்கு சீனாவும் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 4 பேர் பலியாகியுள்ளதுடன், 268 பேர் காயமடைந்துள்ளனர்.

image

Related posts: