மூன்று மாதங்களுக்கு அவசர நிலை அறிவிப்பு!

Thursday, July 21st, 2016

துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அவசர நிலையை அந்நாட்டின் ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்துவான் பிறப்பித்துள்ளார்.

“ஆயுதப்படைகளில் இருக்கும் அனைத்துக் கிருமிகளும் அகற்றப்படும்” என்று அங்காராவில் அதிபர் மாளிகையில் பேசுகையில் எர்துவான் கூறினார். ஏற்கனவே இந்த அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 10000 பேரின் காவலை நீட்டிக்க இந்த அவசர நிலைப் பிரகடனம் பயன்படுத்தப்படும்.

600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கோ, சட்டத்துக்கோ அல்லது சுதந்திரங்களுக்கோ எதிரானதல்ல என்றார் துருக்கி ஜனாதிபதி.

ஆனால் எர்துவானின் இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் பிராங்க் வொல்டர் ஸ்டெயின்மெயர், அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு துருக்கியின் எதிர்வினை, அளவுடனானதாக இருக்க வேண்டும், மேலும் சட்டத்தின் ஆட்சியை அரசு கடைப்பிடிக்கவேண்டும் என்றார். சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்படக்கூடிய செயல்கள் மட்டுமே அரசு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும், அரசியல் சார்புகள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றார் அவர்.

Related posts: