முஸ்லிம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ்!

Friday, March 25th, 2016

ஜேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்புதனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டதை நினைவூட்டும் வகையில் புனித வியாழன் கடை பிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை கழுவி போப் ஆண்டவர் முத்திமிடுவது வழக்கம். இந்த தடவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோம் புறநகர் பகுதியாக கேஸ்டெல்நுவோ டி போர்யோ என்ற இடத்தில் உள்ள கைதிகள் முகாமிற்கு சென்றார்.அங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அகதிகளாக குடிபெயர்ந்த ஆர்த்தொடெக்ஸ் உள்ளிட்ட இதர பிரிவு கிறிஸ்தவர்கள், 3 முஸ்லிம் மற்றும் ஒரு இந்து உள்ளிட்ட 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இவர்களில் 4 பேர் பெண்கள்.பாரிஸ் மற்றும் பிரசல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் நடந்து உள்ளது
பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது:-
முஸ்லிம்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள், ஆர்த்தோ டெக்ஸ், இவாஞ்சலிசல் என பல கிறிஸ்தவர் பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
ஆனால் நாம் அனைவரும் சகோதரர்கள், கடவுளின் குழந்தைகள் அனைவரும் அமைதி, சமாதானம் மற்றும் ஒற்றுமையுடன் வாழவே அவர் விரும்புகிறார் என் றார்.
மேலும் அவர் கூறும் போது, பெல்ஜியம் தலை நகர் பிரசல்ஸ் நகரில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். ரத்த வெறி பிடித்தவர்கள் செய்யும், போருக்கான சமிக்ஞை என்று வர்ணித்தார்.

அகதிகள் முகாமிற்கு சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் ஈஸ்டர் முட்டைகள், கால்பந்துகள் பரிசளித்தார். பணம் நன்கொடை வழங்கினர்.

Related posts: