முஸ்லிம்களுக்கெதிராக மியன்மாரில் தாக்குதல்- அமெரிக்கா கவலை!

மியன்மாரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ராக்கெய்ன் மாநில இராணுவத்தினர் மேற்கொண்ட கொடூர தாக்குதலால் ஐக்கிய அமெரிக்க கவலையடைந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மியான்மர் தொடர்பான அறிக்கை தொடர்பிலேயே இந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பாக வொஷிங்டன் மேலும் ஆராய்ந்து வருவதாகவும் குறித்த அறிக்கையின் முடிவுகள் குறித்து கடும் கவனம் செலுத்தி உள்நாடு மக்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க திணைக்களம் மியன்மார் அரசை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர்களில் ஒருவரான கட்டினா அடம்ஸ் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
மியன்மார் பாதுகாப்பு படையினர் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம்களை கொலை செய்துள்ளதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளதாகவும், அவர்களது கிராமங்களை எரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுக்கள் நம்பகமான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதாகவும் குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும் எனவும் குறித்த பகுதிகளுக்கு மனிதாபிமான பணிகள் மற்றும் ஊடகங்கள் சென்றடைய வொஷிங்டன் மியன்மார் அரசாங்கத்தை கோருவதாகவும் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் கட்டினா அடம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|