மும்பை அனர்த்தம்: உயிரிழப்பு 17ஆக உயர்வு!

Wednesday, July 26th, 2017

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புறநகர் பகுதியிலுள்ள 40 ஆண்டுகள் பழைமையான நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், குறித்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினேழாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற குறித்த அனர்த்தம் தொடர்பில், கட்டடத்தின் கீழ் தளத்திலுள்ள மருத்துவ நிலைய உரிமையாளரும், சிவசேனா அமைப்பின் உறுப்பினருமான சுனில் சிதாப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் அலட்சியமாக செயற்பட்டு அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டும் உள்ளது.

குறித்த கட்டட அனர்த்தத்தில் 11 பேர்வரை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்துக்குள்ளான கட்டடத்தில் 60இற்கும் மேற்பட்ட தேசிய மீட்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ் தளத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் புரனமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Related posts: