முன்னாள் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Tuesday, July 28th, 2020

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் பதவியில் இருந்தபோது தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர் அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இதனயைடுத்து அவருக்கு சொந்தமான கட்டடங்களில் மலேசிய ஊழல் தடுப்புப் படையினர் நடத்திய சோதனைகளின்போது 273 மில்லியன் டொலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார், அவருடைய 408 வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பில் இன்று அவர் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

Related posts: