முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்! அறிக்கை வெளியிட்ட அப்பலோ!!

Tuesday, October 4th, 2016

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிவந்த நிலையில் தற்போது நோய் தொற்று சிகிச்சை, அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது பற்றி 13 நாட்களுக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு, அங்கு நடந்த பரிசோதனைகளின் முடிவில் நுரையீரலில் நோய்த்தொற்று அதிகமாகி மூச்சுவிட சிரமப்படுவதாக தகவல் வெளியானது.

காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், அதை அறிக்கையாக வெளியிட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சையளிக்கவே, காய்ச்சல் குணமாகி, உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீரானது.

13 நாட்கள் சிகிச்சை முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 13 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக அடிக்கடி ஊடகங்களுக்கு அறிக்கை வெளிவருகிறது. 23, 24ஆம் தேதிகளில் அப்பல்லோ அனுப்பிய ஊடகக் குறிப்புகளில் முதல்வர் வழக்கமாக உண்ணும் உணவுகளை உட்கொள்கிறார் என்று கூறப்பட்டது. 02-10-2016 என்று வெளியிட்ட அறிக்கையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலின் கண்காணிப்பில் முதல்வர் இருப்பதாக அறிக்கை கூறியது.

செயற்கை சுவாசம் இந்த நிலையில் திங்கட்கிழமையன்று 03-10-2016 வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என அப்போலோ நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் அதன் அறிக்கையில், உடலுக்கு தேவையான சுவாச உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது, வென்டிலேட்டர் போன்ற உபகரணங்களை கொண்டு செயற்கை சுவாச உதவி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு ஓரளவு உடல்நிலை சீரான நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மதியத்திலிருந்து மீண்டும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டிருக்கிறார் முதல்வர். ஏற்கனவே, நுரையீரல் தொற்றுக்காக கொடுக்கப்பட்ட மருந்துகள் ஓரளவு பலனளித்தநிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியத்துக்குமேல் அந்த மருந்துகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. ஆகவே, அப்பல்லோ நிர்வாகம் உடனடியாக டெல்லி, மும்பையிலிருந்து நோய்த்தொற்று தடுப்பு சிறப்பு மருத்துவர்களை அழைத்தது. அவர்கள் முதல்வருக்கு மாற்று மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த மருந்துகளாலும் நுரையீரல் தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் மூச்சுத்திணறலுக்காக அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

முதல்வர் வெண்டிலேட்டரில் இருக்கிறார் என்பது தவறான தகவல். இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். அவருக்கு மூச்சுவிட சிரமங்கள் இருக்கும் நேரத்தில் மட்டும் செயற்கை சுவாசத்தை தேவையான அளவு கொடுக்கிறார்கள் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா விரைவில் நலமடைந்து வீடு திரும்பவேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் பிராத்தனையாக உள்ளது.

Ct5HTZaVUAAaRJv-580x782

04-1475550754-jayalalitha-hospitalized46567

Related posts: