முடிவுக்கு வருகிறது கியூப மக்களுக்கான அமெரிக்காவின்  விசா தொடர்பான சலுகை!

Friday, January 13th, 2017

கியூபா மக்கள் விசா இல்லாமல் குடியேறிகளாக அமெரிக்காவுக்கு வந்து தங்க அனுமதிக்கும் நீண்டகால கொள்கையை அதிபர் பராக் ஒபாமா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

20 ஆண்டுகளாக இருந்து வருகின்ற இந்த கொள்கைப்படி,, அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வந்தடையும் கியூபா மக்கள், அங்கு ஓராண்டு தங்கியிருந்த பின்னர், சட்டப்படி நிரந்தரமாக தங்குகின்ற உரிமையை பெறுபவர்களாக இருந்து வந்தனர்.

இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அல்லது நாடு கடத்தப்படும் தங்களது மக்களை ஏற்றுகொள்ள கியூபா ஒப்பு கொண்டுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியில் இருக்கும் கடைசி நாட்களில் கியூபாவோடு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பாராக் ஒபாமா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக இது அமைகிறது.

விசா இல்லாமல் அமெரிக்கா வர அனுமதிக்கிற கொள்கையானது இதுவரை கியூபா மக்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்து வந்துள்ளது.விசா இல்லாமல் அமெரிக்கா வருகின்ற பிற நாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவர்.

_93549509_dd9a5238-5789-4360-afec-6202c5b96ea1

Related posts: