முடக்க நிலையை படிப்படியாக நீக்க ஜேர்மன் முடிவு – அதிபர் அஞ்சலா மேக்கல்!

Thursday, April 16th, 2020

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டின் முடக்கநிலையை மெதுவாக நீக்கப்போவதாக ஜேர்மனிய அதிபர் அஞ்சலா மேக்கல் தெரிவித்துள்ளார்.

இதன்படி மே 3ம் திகதி வரை சமூக இடைவெளித்திட்டம் முன்னெடுக்கப்படும். அதேநேரம் வியாபாரத்தளங்களிலும், பேருந்துகளிலும் முகக்கவங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மே 4ஆம் திகதியில் இருந்து படிப்படியாக திறக்கப்படவுள்ளன.

அடுத்த வாரம் முதல் குறிப்பிட்ட வியாபாரத்தளங்கள் திறக்கப்படும். எனினும் ஆகஸ்ட் 31வரை, ஒன்றுக்கூடல்கள், சமய நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகள் மற்றும் கேளிக்கை அகங்கள் யாவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

இதே வேளை, ஜேர்மனில் கொரோனா வைரஸ் காரணமாக 3524பேர் மரணமாகினர். 127ஆயிரத்து 584பேர் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: