முடக்கப்பட்ட இணையத்தளம் மீண்டும் புதுப்பொலிவுடன்!

ddos-attack-hits-kickass-torrents-dns-servers-crippled-499019-2 Sunday, July 24th, 2016

அமெரிக்காவில்  முடக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்காஸ் டாரண்ட்ஸ் புதிய பெயரில், புதுப்பொலிவுடன் இயங்குகின்றது.

கிக்காஸ் டாரண்ட்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஒன்லைனில்  பொழுது போக்கு அம்சங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்து வந்தது.

சுமார் 100 கோடி அமெரிக்க டொலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக முறைப்பாடு செய்யப்ட்டதனையடுத்து  அமெரிக்க நீதித்துறையால் இந்த இணையதளம் நேற்றுமுன்தினம் முடக்கப்பட்டது. இணையதளத்தின்  உரிமையாளரான ஆர்டம் வாலின் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இணையதளம் முடக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் KAT.am என்ற பெயரில் ( Kickass Torrents) மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது குறித்து அதன் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்தியில் ‘முடக்கப்படுவதை தடுக்கும் வகையில் கிளவுட் வேவர்வர்களில் டேட்டா சேமிக்கப்பட்டுள்ளது.தற்போது வெளியாகியுள்ள இணைதளமானது, மேம்படுத்தப்பட்டு, புதுப் பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைத்தொலைபேசிகளில் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது என நக்கலாக  தெரிவித்துள்ளார்.