முக்கிய நகரை மீட்க தீவிர தாக்குதலில் ஈராக் ராணுவம்!

Wednesday, August 24th, 2016

ஈராக்கின் வடக்கு நகரமான காயாராவை மீட்கும் முயற்சியாக, இராக் ராணுவம் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் தலைமையில் அமைந்துள்ள கூட்டுப்படை, உயர் ரக ராணுவ பிரிவுகளுக்கு ஆதரவாக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. மேலும், அங்கு கடுமையான சண்டை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.காயாரா நகரம் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முன்பு, வடக்கில் 60கி.மீ தொலைவில் ஐ.எஸ்.கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரில் பெரிய சண்டை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: