முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளுக்கு பிரித்தானியாவில் தடை?

Wednesday, June 7th, 2017

இலண்டனில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் விதத்தில் அமைந்த ஆடைகளுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த  தெரேசா மே, பயங்கரவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் பிரித்தானியா அவற்றை சகித்துக்கொண்டது எனவும், அதனால் இனிமேல் பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தீவிர அக்கறை செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பொலிஸ் அதிகாரிகள் பலர் புதிதாக உள்வாங்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகத்தை மறைக்கும் வகையில் அணியப்படும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: