மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்தோனீஷியாவை குற்றஞ்சாட்டுகிறது சீனா!

தெற்கு சீனக் கடலில் தங்களின் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு மீனவரைக் காயமடையச் செய்ததாக சீனா, இந்தோனீஷியாவின் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்த இரு நாடுகளிடையே சமீப மாதங்களில் கடலில் நடக்கும் மூன்றாவது மோதல் இது. சீன மீனவர்களை இந்தோனீஷியா துன்புறுத்துவதாகக் கூறி, பீய்ஜிங்கில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நட்டுனா தீவுகளில் சட்ட விரோதமாக மீன் பிடித்துக்கொண்டிருந்ததால், எச்சரிக்கும் விதமாக சீன கொடிகள் உள்ள பல படகுகளை நோக்கி சுட்டதாக இந்தோனீஷியாவின் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தோனீஷியா, அந்த பகுதி தங்களின் பிரத்யேக பொருளாதார பகுதி என்று கூறுகிறது ஆனால் சீனா தங்களின் மீனவர்கள் பாரம்பரியமாக அங்கு வேலை செய்து கொண்டுவருவதாக தெரிவிக்கிறது.
Related posts:
ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்கா!
சுவிஸ் அணு உலைகளை மூட மக்கள் எதிர்ப்பு?
தொடர் மழையால் நடந்த துயரம்: 112 பேர் பலி!
|
|