மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ!
Monday, May 21st, 2018வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள்மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related posts:
பெல்ஜியம் தாக்குதலுக்கு அஞ்சலி!
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை விடுதலை!
|
|