மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் துருக்கி!

Tuesday, March 21st, 2017

துருக்கியில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி தையீப் ஏர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் சர்வஜென வாக்கெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தயக்கமும் இன்றி மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தான் அங்கீகாரம் அளிப்பேன் என துருக்கி ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் தொடர்பான சர்வஜென வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.இந்த மறுசீரமைப்புக்கள் ஊடாக பாரம்பரியமாக உள்ள ஜனாதிபதி பதவி மாற்றப்படுவதுடன், பிரதமருக்கான அலுவலகம் நீக்கப்படவுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு ஜுலை மாதம் தமது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி நடவடிக்கையை முன்னெடுத்த அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி மறைமுகமாக கருத்துக்களை தெரிவித்துவருகின்றார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள், ஸ்தீரமானதும் பாதுகாப்பானதுமான அரசியலமைப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உதவும் எனவும் உலகில் பலமிக்க நாடுகளை ஒத்ததாக அது அமையும் எனவும் துருக்கி ஜனாதிபதி தையீப் ஏர்துவான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: